
டிரம்ப்பின் அறிக்கைகளால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை
நேற்றுடன் ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி, WTI கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 1% அதிகரித்து 91.39 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ப்ரெண்ட் வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 1.10% அதிகரித்து 103.3 டொலர்களாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, மர்பன் வகை கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 105.4 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 14.52% வீழ்ச்சியாகும் என அந்த அறிக்கைகள் மேலும் குறிப்பிடுகின்றன.
ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் எடுத்த முடிவைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது.
இருப்பினும், தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் தொடர்பான நிச்சயமற்ற நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்து வருகின்றது.

