ஈரானின் அணுசக்தி மற்றும் கைத்தொழில் நிலையங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கஈரான் சபதம்

ஈரானின் அணுசக்தி மற்றும் கைத்தொழில் நிலையங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கஈரான் சபதம்

ஈரானின் யாஸ்த் (Yazd) பகுதியில் உள்ள யுரேனியம் பதப்படுத்தும் நிலையம் மற்றும் பல முக்கிய உள்கட்டமைப்பு தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கு “கடுமையான விலை கொடுக்க வேண்டி வரும்” என ஈரான் எச்சரித்துள்ளது.

இதேவேளை யுரேனியம் செறிவூட்டலுடன் தொடர்புடைய ஒரு நிலையத்தை இலக்கு வைத்துத் தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரான் தரப்பில் உயிரிழப்புகளோ அல்லது கதிர்வீச்சு கசிவுகளோ ஏற்படவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், புஷெஹ்ர் (Bushehr) அணுமின் நிலையத்திற்கு அருகிலும் ஏவுகணை ஒன்று வீழ்ந்துள்ள போதிலும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

கொண்டாப் (Khondab) கனநீர் வளாகம் மற்றும் குசெஸ்தான் (Khuzestan), இஸ்பஹான் (Isfahan) ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான எஃகு தொழிற்சாலைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

அணுசக்தி மற்றும் கைத்தொழில் உள்கட்டமைப்புகள் மீதான இந்தத் தாக்குதல்களை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், இதற்கு மிக வலுவான பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )