ஜோர்டானில் உள்ள பல விமான தளங்கள் மீது தாக்குதல்

ஜோர்டானில் உள்ள பல விமான தளங்கள் மீது தாக்குதல்

ஈராகில் செயல்படும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான ஈராக்கில் “இஸ்லாமிய எதிர்ப்புப் போராட்டம்”
Islamic Resistance in Iraq ஜோர்டானில் உள்ள பல முக்கிய விமான தளங்கள் மற்றும் ஒரு சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக, ஈராக் ஆதரவு மிலிட்டியா செய்தி ஊடகமான சபரீன் (Sabereen) தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களின் இலக்குகளாக கிங் ஃபைசல் விமானப்படைத் தளம் (King Faisal Air Base), கிங் அப்துல்லா விமானப்படைத் தளம் (King Abdullah Air Base), குயின் அலியா சர்வதேச விமான நிலையம் (Queen Alia International Airport) ,பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளம் (Prince Hassan Air Base) மற்றும் முவஃபாக் சால்டி விமானப்படைத் தளம்
(Muwaffaq Salti Air Base) ஆகியவை இடம்பெற்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த தாக்குதல்களின் விளைவுகள், சேதம் அல்லது உயிரிழப்புகள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என மதிப்பிடப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )