
இஸ்ரேலை குறிவைத்து ஹூத்தி தாக்குதல்
யேமனில் செயல்படும் ஹூத்தி கிளர்ச்சிக் குழு, இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் மோதல் நிலைமையில், ஹூத்திகள் மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும்.
குழுவின் அறிக்கையின்படி, தெற்கு மேற்கு கரை (West Bank) பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் இராணுவ தளங்களை இலக்காகக் கொண்டு பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, யேமனிலிருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணையை கண்டறிந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.
லெபனான், ஈரான், ஈராக் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகள் தாக்கப்படுதல் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பு சம்பவங்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஹூத்திகள் கூறியுள்ளனர்.
மேலும், “எங்கள் இலக்குகள் அடையப்படும் வரை மற்றும் அனைத்து எதிர்ப்பு முனைகளுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும்” என்றும் ஹூத்தி குழு எச்சரித்துள்ளது.
இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

