
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் 7,500 வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன முடிவுத் திகதி 2026 மே 08
இலங்கை பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) ஆகியவற்றில் நிலவும் சுமார் 7,500 வெற்றிடங்களுக்காக பயிலுநர் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பயிலுநர் பொலிஸ் கொன்ஸ்டபிள் (Apprentice PC),
பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஓட்டுநர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.police.lk ஊடாக “Join Us” என்ற பகுதிக்குச் சென்று அல்லது வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஆன்லைன் (Online) ஊடாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 மே மாதம் 08 ஆம் திகதி ஆகும்.
விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்படின், பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவின் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்:
071-8591925
011-2505202
011-2552953
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு தழுவிய ரீதியில் இந்த ஆட்சேர்ப்பு இடம்பெறவுள்ளது.
ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் உள்ள இளைஞர், யுவதிகளை பொலிஸ் சேவையில் இணையுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

