
தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சந்திக்க சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால்,தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (31) காலை சென்றுள்ளார் .
கடந்த 7 வருடங்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் தங்களை, உடனடியாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறு கோரி,கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் இந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்காததால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வதாக உண்ணாவிரதத்தில் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை போராட்டக்காரர்களில் சிலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுகுறிப்பிட சிகிச்சை பெற்று வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

