
முன்னாள் அமைச்சர்களை தடுத்து வைத்துள்ள வெலிக்கடை சிறைச்சாலை அறையில் 6 செல்போன்கள் கண்டுபிடிப்பு
வெலிக்கடை சிறைச்சாலையின் கே அறையில் 06 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
சிறைச்சாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் செல்போன்களுடன் வேறுசில துணைப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘கே’ அறையில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

