கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியில் மஹியாவ சுரங்கப்பாதை பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன

கண்டி – யாழ்ப்பாணம் A9 வீதியில் மஹியாவ சுரங்கப்பாதை பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன

கண்டி – யாழ்ப்பாணம் (A9) பிரதான வீதியில் மஹியாவ பகுதியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நிர்மாணிக்கப்படும் புதிய சுரங்கப்பாதையின் பணிகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பரபரப்பான வீதிப் பகுதியில் கனரக வாகன நெரிசலைக் குறைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்தத் திட்டம் சுமார் 700 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படுகிறது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்வின் தலைமையில் இந்த அபிவிருத்தித் திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியூடான போக்குவரத்து சீரமைக்கப்படுவதுடன், பயணத் தொடர்புகளும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )