
தெஹிவளை மற்றும் மொரட்டுவ உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 5 மணி நேர நீர்வெட்டு
தெஹிவளை மற்றும் மவுண்ட்லாவன்யா மாநகர சபையின் பல பகுதிகளில் நாளை 5 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சார விநியோகம் தடைபட்டதன் காரணமாக அதனை சரிசெய்யும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக சபை தெரிவித்துள்ளது.
களுபோவில, தெஹிவளை , மவுண்ட்லாவன்யா , ரத்மலான, மொரட்டுவ, ராவத்தவத்த, சொய்சபுர போன்ற பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீர்வெட்டு அமுலில் இருக்கும் என சபை கூறியுள்ளது.
CATEGORIES Sri Lanka

