மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க – இஸ்ரேலியப் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்ஈரான் விடுத்த கடுமையான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க – இஸ்ரேலியப் பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்ஈரான் விடுத்த கடுமையான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் அமைந்துள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, பிராந்தியத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் “சட்டபூர்வமான இலக்குகளாக” கருதுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அறிவுறுத்தியுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்க்க வேண்டுமானால், ஈரான் பல்கலைக்கழகங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுகளை அமெரிக்கா கண்டிக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கண்டனமானது மார்ச் 30-ஆம் தேதி ஈரான் நேரப்படி நண்பகல் 12:00 மணிக்கு முன்னதாக வெளியிடப்பட வேண்டும் என்றும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படை காலக்கெடு விதித்துள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )