
ஆமை இறைச்சியுடன் மூன்று பேர் கைது
மன்னார், நாச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, பத்து கிலோகிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு படகுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26 முதல் 32 வயதுக்கிடைப்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஆமை இறைச்சி, முட்டைகள் மற்றும் படகுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி வனவிலங்கு அலுவலகத்திடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

