
யாழில் இராணுவ வாகனம் மோதி முதியவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில், முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
துவிச்சக்க வண்டியில் பயணித்த முதியவர் ஒருவரை இராணுவ வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் நவரட்ணம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இராணுவ பொலிஸாரும் பலாலி பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

