பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ; அரையிறுதிக்கு முன்னேறிய அனிசிமோவா

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ; அரையிறுதிக்கு முன்னேறிய அனிசிமோவா

ஒவ்வொரு ஆண்டும் 8 முன்னணி வீராங்கனைகள் மற்றும் டாப்-8 ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி வரும் 8-ம் திகதி வரை நடக்கிறது.

இந்நிலையில், 3வது சுற்றில் அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை இகா ஸ்வியாடெக் போராடி 7-6 (7-3) என வென்றார்.

இதில் சுதாரித்துக் கொண்ட அனிசிமோவா அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் அரையிறுதிக்கும் தகுதிபெற்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )