முறையான மாற்றம் ஏற்படும் வரை வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் – டொனால்ட் டிரம்ப்

முறையான மாற்றம் ஏற்படும் வரை வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் – டொனால்ட் டிரம்ப்

“பாதுகாப்பான, முறையான மற்றும் நியாயமான மாற்றம் நிகழும் வரை” வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்த்ததன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது

நேற்று அதிகாலை அமெரிக்கா வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி வெனிசுலா நீண்டகால ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்தது ,

“Operation Absolute Resolve” என்று பெயரிடபட்ட .இந்த தாக்குதலில் வெனிசுலா கராகஸ் வளாகத்தில் இருந்து கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் சில மணி நேரங்களுக்குப் பிறகு மாலை 4.30அளவில் அமெரிக்ககட்டுப்பாட்டில் இருந்த ,வைட் போயிங் 757 விமானத்தில் ஏற்றிச்செல்லப்பட்டு அமெரிக்காவின் ஸ்டீவர்ட் விமான தேசிய பாதுகாப்பு படை தளத்தில் தரையிறங்கினார்.

அவர் ஹெலிகாப்டர் மூலம் நியூயார்க் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர் விசாரணை செய்யப்பட்டு பெருநகர தடுப்பு மைய சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன .

வெனிசுலா ஜனாதிபதி திங்கள்கிழமை மாலைக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெனிசுலாவில் நேற்று அமெரிக்கா நடத்திய வான் வலி தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உட்பட குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

தாக்குதலின் போது கராகஸின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட அந்த அதிகாலை இருட்டில் அமெரிக்க சிறப்புப் படைகள் மதுரோவை கைதுசெய்ததாக டிரம்ப் கூறினார் .

“இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மக்கள் கண்டிராத தாக்குதல்” என்று இந்த தாக்குதலை டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.


மதுரோவின் கைதுக்குப் பிறகு, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவிற்குச் சென்று உட்கட்டமைப்பைச் சீரமைக்கும் என்றும், “மண்ணுக்குள் இருக்கும் பணத்தைக் கொண்டே” (oil revenue) இந்த ராணுவ நடவடிக்கையின் செலவுகள் ஈடுகட்டப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

2007-ஆம் ஆண்டு ஹியூகோ சாவேஸ் காலத்தில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் (ExxonMobil, ConocoPhillips போன்றவை) வெனிசுலாவில் இருந்து வெளியேற்றப்பட்டதை டிரம்ப் பலமுறை விமர்சித்துள்ளார்.

இதேவேளை வெனிசுலாவில் தற்போது தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டுத் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், “நாங்கள் ஒருபோதும் அடிமையாக மாட்டோம்” என்று கூறி இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

வெனிசுலா ஜனாதிபதி மதூரோ ஒரு போதைப்பொருள் கடத்தல் ஆட்சியை நடத்துவதாகவும், தேர்தலில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் மதுரோ மீது “போதைப்பொருள் பயங்கரவாதம்”, கோகைன் இறக்குமதி செய்ய சதி செய்தல் மற்றும் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும்
“அவர்கள் எங்களது எண்ணெய் உரிமைகளைப் பறித்தார்கள்… நாங்கள் அவற்றை இப்போது திரும்பப் பெற விரும்புகிறோம்” என்று அவர் சமீபத்தில் ஒரு காணொளியில் கூறியிருந்தார்.

உலகிலேயே அதிக எண்ணெய் இருப்பு (சுமார் 303 பில்லியன் பீப்பாய்கள்) கொண்ட நாடு வெனிசுலா. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால் அதன் உற்பத்தி மிகக் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெனிசுலா மீதான நேற்றைய அமெரிக்காவின் தாக்குதலை ரஷ்யா, ஈரான், கியூபா போன்ற நாடுகள்”இறையாண்மை மீதான தாக்குதல்” என்று கண்டித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இந்த ராணுவ நடவடிக்கைக்குத் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த அதிரடி ராணுவ நடவடிக்கை ஒரு நாட்டின் இறையாண்மையைக் காக்கும் முயற்சியாஅல்லது இயற்கை வளங் களைக் கைப்பற்றும் முயற்சியா என்பது பற்றிய விவாதம் தற்போது உலக அளவில் சூடுபிடித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )