
ஜனநாயகன் டிரெயிலர் வெளியானது
‘ஜனநாயகன்’ திரைப்படம், நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் 69-வது படமாகவும், அவர் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் நடிக்கும் இறுதித் திரைப்படமாகவும் அமைந்துள்ளதால், உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், விஜய்யின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த டிரெய்லரில், ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் விஜய்யின் அரசியல் வருகையை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

