
வெசாக் வார விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம் 30ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு அடுத்த நாளான மே 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
மேலும், முன்னதாக மே மாதம் 2ஆம் திகதிக்காக வழங்கப்படவிருந்த விடுமுறை தினம் திருத்தம் செய்யப்பட்டு, இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக, இவ்வாண்டுக்கான வெசாக் வாரம் மே 27ஆம் திகதி முதல் ஜூன் 2ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

TAGS cabinet decisionHot NewsMinistry of Public AdministrationNotificationpublic holidaySri lankaVesak festival

