
வாதுவையில் ரயில் தடம்புரண்டது
இன்று (24) காலை பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா ரயில் வாதுவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால் கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடம்புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், சேதமடைந்த பாதையை சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES Sri Lanka

