வெற்றிலை மென்று பொது இடங்களில் துப்பினால்  கடும் சட்ட நடவடிக்கை

வெற்றிலை மென்று பொது இடங்களில் துப்பினால் கடும் சட்ட நடவடிக்கை

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட நகரப் பகுதிகளில் போதைப் பயன்பாட்டை தடுக்கும் வகையில் தவிசாளர் மே. வினோராஜ் தலைமையில் இன்று (02) அதிரடியான விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச் சந்தை மற்றும் பிரதான வீதிகளில் மது அருந்தல், புகை பிடித்தல் போன்ற செயல்களை தடுப்பதற்காக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு, இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.

பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் கலந்துகொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வு சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )