
முதன் முறையாக கிராமி விருது வென்ற திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, தனது 90 ஆவது வயதில் முதல்முறையாக உலகின் உயரிய இசை விருது ‘கிராமி’வை வென்றார்.
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (01) நடைபெற்ற 68வது கிராமி விருது வழங்கும் விழாவில் தலாய் லாமா “Meditations: The Reflections Of His Holiness The Dalai Lama” என்ற ஆல்பத்திற்காக ‘சிறந்த ஒலி புத்தகம், கதை சொல்லல் மற்றும் விவரிப்பு’ பிரிவில் விருது பெற்றார்.

