சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இந்த வருடம் 15 நாடுகளை இலக்காகக் கொண்ட உலகளாவிய சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளவில் இலங்கையின் பிம்பத்தை மிகச் சிறந்த இடத்திற்கு கொண்டு செல்வதில் வெற்றி பெற்றுள்ளோம். அதன்படி, சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒப்பீட்டளவில் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. பெப்ரவரி 15ஆம் திகதி வரையான நிலவரப்படி, சுமார் 436,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )