லீ க்ரோனின்ஸ் த மம்மி படத்தின் டிரெய்லர் வெளியானது

லீ க்ரோனின்ஸ் த மம்மி படத்தின் டிரெய்லர் வெளியானது

பிரபல இயக்குனர் லீ க்ரோனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “லீ க்ரோனின்ஸ் த மம்மி”. திகில் படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த இவர், இந்த முறை ‘தி மம்மி’ கதையை புதிய கோணத்தில் திரையில் கொண்டுவந்துள்ளார்.

இதில் ஜாக் ரெய்னர் , லாயா கோஸ்டா , மே காலமாவி , நடாலி கிரேஸ் மற்றும் வெரோனிகா பால்கான் ஆகியோர் நடித்துள்ளனர். திகில் மற்றும் அதிரடி அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 17ந் தேதி உலகளவில் உள்ள திரையரங்குகிளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ஹாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “லீ க்ரோனின்ஸ் த மம்மி” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரில் பழமையான சாபம், மர்ம சூழல், அதிரடியான காட்சிகள் மற்றும் பதட்டமான பின்னணி இசை ஆகியவை ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )