
இலங்கைக்கு வழங்கிய எரிபொருள் உதவிக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த சஜித்
இலங்கைக்கு அவசர எரிபொருள் வழங்க முன்வந்தமைக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தியாவுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தனது ‘X’ சமூக வலைத்தளப் பதிவில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“அவசர எரிபொருள் உதவிக்காக நாம் இந்தியாவுக்கு நன்றி கூறுகிறோம். உறவுகள் என்பவை வசதியான காலங்களில் அல்ல, மாறாக நெருக்கடி காலங்களிலேயே சோதிக்கப்படுகின்றன என்பதை இது நினைவூட்டுகிறது. எமக்குத் உதவிகள் தேவைப்பட்ட நேரத்தில் எமது பக்கம் நின்றவர்களை நாம் மறந்துவிடக் கூடாது.”
CATEGORIES Sri Lanka

