மியான்மரில் நிலநடுக்கம்

மியான்மரில் நிலநடுக்கம்

மியான்மரில் தொடர்ந்து சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று (26) அதிகாலை மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அதிகாலை 2.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று இரவு 8.45 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )