வெப்ப காலங்களில் ஜன்னல்களை திறந்து வைத்துதிருட்டுச் சம்பவங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம்                                       – பொலிஸார் அறிவுறுத்தல்

வெப்ப காலங்களில் ஜன்னல்களை திறந்து வைத்துதிருட்டுச் சம்பவங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் – பொலிஸார் அறிவுறுத்தல்

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக,
வீடுகளுக்குள் நுழையும் திருடர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெப்பம் காரணமாக இரவு நேரங்களில் காற்றோட்டத்திற்காகப் பல குடியிருப்பாளர்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்கின்றனர்.

இவ்வாறான பழக்கங்கள் குற்றவாளிகளுக்குச் சாதகமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பாதுகாப்பில் சமரசம் வேண்டாம்: வசதிக்காகப் பாதுகாப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள பொலிஸார்,

உறங்கச் செல்வதற்கு முன்னர் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

காற்றோட்டத்திற்காகத் திறந்து வைக்கப்படும் ஜன்னல்களில் பலமான இரும்பு கிரில்களைபொருத்துதல்.

அனைத்துக் கதவுகள் மற்றும் நுழைவாயில்கள் சரியாகப் பூட்டப்பட்டிருப்பதை உறுதி செய்தல்.

திருடர்களைத் தடுக்கும் வகையில் வீட்டைச் சுற்றிப் போதுமான வெளிப்புற மின்விளக்குகளைப் பயன்படுத்துதல்.

சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடமாட்டங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறும், அது குறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தெரியப்படுத்துமாறும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )