
ஓமானில் கைது செய்யப்பட்ட ‘மிதிகம சூட்டி’நாளை அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்படுகிறார்
ஓமானில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான பிரபாத் மதுசங்க எனப்படும் ‘மிதிகம சூட்டி’ நாளை அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இதற்கமைய, அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) மூன்று அதிகாரிகள் தற்போது ஓமான் நோக்கிப் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

