
ஈரான் – அமெரிக்க மோதலைத் தணிக்க பிராந்திய வல்லரசுகள் இஸ்லாமாபாத்தில் சந்திப்பு
எகிப்து, துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரானுடன் கொண்டுள்ள போர்ச் சூழலைத் தணிப்பது மற்றும் ஏனைய பிராந்தியப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இந்தப் பிராந்திய வல்லரசுகள் இன்று (29) மற்றும் நாளை (30) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் ஒன்றுகூடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இராஜதந்திர முயற்சிகளில் முக்கிய மத்தியஸ்தராக பாகிஸ்தான் முன்னின்று செயல்படுகிறது.
இதன்போது, வொஷிங்டனால் முன்மொழியப்பட்ட 15 அம்ச அமைதித் திட்டத்தை தெஹ்ரானிடம் சமர்ப்பிக்கவும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது.

