
RR vs CSK அணிகள் இன்று மோதல்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த ஆட்டம் கவுஹாத்தி நகரில் உள்ள பர்சப்பாரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
எனினும், அண்மைய நிலவரப்படி கடைசி 6 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே முன்னிலை வகிக்கிறது.
இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
CATEGORIES Sports News

