
மின் கட்டணம் உயர்வு ; ஏப்ரல் 1 முதல் புதிய விலைகள் அமுல்
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின் கட்டணத்தை உயர்த்த இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒருமனதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி, புதிய மின் கட்டணத் திருத்தம் ஏப்ரல் 1 முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்திற்காக, இலங்கை மின்சார சபை 13.56% உயர்வை முன்மொழிந்திருந்தது.
புதிய கட்டண அமைப்பின் படி,
0 – 30 யூனிட் வரையிலான பிரிவில் 4.3% உயர்வு மேற்கொள்ளப்பட்டு, மாதத்திற்கு ரூ.15 அதிகரிக்கும்.
31 – 60 யூனிட் பிரிவில் 6.9% உயர்வு, மாதத்திற்கு ரூ.45 அதிகரிப்பு.
61 – 91 யூனிட் பிரிவில் 6.9% உயர்வு, மாதத்திற்கு ரூ.120 அதிகரிப்பு.
91 – 120 யூனிட் பிரிவில் 7.1% உயர்வு, மாதத்திற்கு ரூ.420 அதிகரிப்பு.
இந்த புதிய மின் கட்டண உயர்வு, நாட்டின் தற்போதைய ஆற்றல் செலவுகள் மற்றும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

