பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல் ராஜபக்ஷ இரங்கல்!

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு நாமல் ராஜபக்ஷ இரங்கல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (26) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்க்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

இதன்போது இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பேராயர் பிரையன் உதைக்வே ஆண்டகைக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் உரையாடல் இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ்க்கு எனது இரங்கலைத் தெரிவித்ததில் நான் பெருமை கொள்கிறேன்.

மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இரக்கம், பணிவு மற்றும் சமூக நீதிக்கான அர்ப்பணிப்பு ஆகியன உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஆழமாகப் பாதித்தன என நாமல் ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )