உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் பேரில், பொலிஸ் மா அதிபரால் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு பொலிஸ் அத்தியட்சகருக்கும், 7 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இடமாற்றங்களும் புதிய நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவை தேவைகளை கருத்தில் கொண்டு இந்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )