
டுபாய் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள் முறியடிப்புஇலங்கையர் ஒருவருக்கு சிறு காயங்கள்
டுபாய் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது வீழ்ந்த சிதைவுகள் காரணமாக, இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
இதில் இலங்கையர் ஒருவரும் ஒரு பங்களாதேச பிரஜை மற்றும் இரண்டு இந்திய பிரஜைகளும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தெற்கு டுபாயின் குடியிருப்புப் பகுதி ஒன்றில் இந்த ஏவுகணைச் சிதைவுகள் விழுந்துள்ளன. இதனால் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஈரானால் ஏவப்பட்ட வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே இன்று டுபாய் முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாக டுபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
2026 பெப்ரவரி 28 அன்று போர் ஆரம்பமானதிலிருந்து, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இதுவரை 178 பேர் காயமடைந்துள்ளதுடன், 11 மரணங்கள் பதிவாகியுள்ளன.

