ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர் விமானத்தின் விமானியை உயிருடன் பிடித்துத் தருபவர்களுக்கு 60 000 டொலர் சன்மானம் – ஈரான் அறிவிப்பு

ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்க போர் விமானத்தின் விமானியை உயிருடன் பிடித்துத் தருபவர்களுக்கு 60 000 டொலர் சன்மானம் – ஈரான் அறிவிப்பு

ஈரான் சுட்டு வீழ்த்திய F-15E ஸ்ட்ரைக் ஈகிள் அமெரிக்க போர் விமானத்தில் காணாமல் போன விமானியை பிடித்துத் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் சுட்டு வீழ்த்திய விமானத்தில் காணாமல் போன மற்றைய அமெரிக்க விமானியை உயிருடன் பிடித்துக் கொடுத்தால் 10 பில்லியன் டோமன் (சுமார் $60,000–$66,100) சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

குறித்த விமானி உயிருடன் ஒப்படைக்கப்பட வேண்டும் என அந்தச் சன்மான நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் தொடங்கி ஆறாவது வாரத்தில் ஈரானிய மண்ணில் அமெரிக்கா விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

நேற்று தெற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E போர் விமானத்தின் வீரர்களைத் மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஒருவர் மீட்கப்பட்டதாகவும் அந்த விமானத்தில் இருந்த இரண்டாவது வீரருக்கு என்ன நேர்ந்தது என்பது இன்னும் தெரியவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகளில் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமெரிக்காவின் F-15E ரக போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெஹ்ரான் உரிமை கோரியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இராணுவம் இன்று உரிமை கோரியுள்ளதாகவும் சில செய்திகளில் கூறப்படுகிறது

இதேவேளை காணாமல் போன அமெரிக்க வீரர் குறித்து டிரம்ப் நேரடியாக இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க தான் விதித்த 48 மணிநேர அவகாசத்திற்குள் தீர்வு காணப்படாவிட்டால் “நரகம் கட்டவிழ்த்து விடப்படும்” என ஈரானை எச்சரித்துள்ளார்.

இந்த போர் பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கியது.
தற்போது 6 வாரங்களை எட்டியுள்ள இந்த மோதலால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இது உலகளாவிய சந்தைகளை உலுக்கியுள்ளதுடன், முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகளை முடக்கி எரிபொருள் விலையை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னர் அறிவித்திருந்த போதிலும், ஈரான் தொடர்ந்து பிராந்தியமெங்கும் பதில் தாக்குதல்களை நடத்தி வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )