
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர்கள் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் 36 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு சீன நாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சீன நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 24,200 சிகரெட்டுகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரையும் தடுத்து வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

