எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கதின் தகவலின்படி, நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) காலை 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன் அமைதிப் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா கூறியதாவது, எரிபொருள் விநியோகத்தில் பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க முறைமைகள் காரணமாக நிரப்பு நிலைய ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இந்த போராட்டத்தின் முக்கிய காரணமாகும்.என ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்

மேலும் அவர் , எரிபொருள் விலை சூத்திரத்தின் படி பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பிற நிறுவனங்கள் 6% இலாபம் பெறுவதும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 3% இலாபப் பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதும், ஆனால் கூட்டுத்தாபனத்தின் புதிய நிர்வாகத்தால் இது வெட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆர்டர் செய்யப்பட்ட டீசல் மற்றும் பெட்ரோல் முறையாக வழங்கப்படாததால், நிரப்பு நிலையங்களைச் செலுத்துவதில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் டி.வி. சாந்த சில்வா சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )