இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரைபெலன்வத்த மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை

இரவு 8.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரைபெலன்வத்த மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் விநியோகத் தடை

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், இன்று (ஏப்ரல் 06) இரவு 8.00 மணி முதல் நாளை (ஏப்ரல் 07) காலை 8.00 மணி வரை பெலன்வத்த மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

லபுகம மற்றும் கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர் உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படும் ஏனைய பகுதிகளிலும் நீர் விநியோகம் பின்வருமாறு மட்டுப்படுத்தப்படும்.

இன்று (06) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டது.

இப்பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த நீர்வெட்டு இன்று காலை 8.00 மணியுடன் நிறைவடைந்தது.

பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )