
ஈராகில் ஒரே நேரத்தில் தாக்குதல் : அமெரிக்கா–இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
ஈராக்கின் நாட்டின் துணை இராணுவப்படையான Popular Mobilization Forces (PMF), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த அமைப்பு வெளியிட்ட தகவலின்படி,
நினிவேஹ் கோவெர்னோரே (Nineveh Governorate) பகுதியில் உள்ள 25வது பிரிகேட் நுண்ணறிவு தலைமையகமும், சலாஹ் அல்-தின் (Salah al-Din Governorate) பகுதியில் உள்ள 52வது பிரிகேட் நிலையமும் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Popular Mobilization Forces (PMF), ஈராக் அரசின் ஒரு பகுதியாக செயல்படும் அமைப்பாக இருப்பதுடன், இதில்ஈரானின் ஆதரவு கொண்ட குழுக்களும் அடங்கியுள்ளன.
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போரில் ஈராகும் இழுக்கப்பட்டுள்ளதுடன், ஈரான் ஆதரவு குழுக்கள் மற்றும் அமெரிக்க படைகள் இடையே தினசரி தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

