
ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஹோர்முஸ் ஜலசந்தி நீரிணையை திறந்துவிட வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07) ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஒரே நேரத்தில் குறிவைக்கப்படும் இது முன்னபோதும் கண்டிராத ஒன்றாக இருக்கும் ஹோர்மூஸ் நீரிணையை திறந்துவிடுங்கள். இல்லையெனில் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும்” என டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகில் முக்கிய எண்ணெய் விநியோக வழித்தடங்களில் ஒன்றான ஹோர்மூஸ் நீரிணை தொடர்பான இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நீரிணை மூடப்படுமானால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கும் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

