
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் தற்போதுவரை 1100 பேர் உயிரிழந்ததுடன் 2500 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News

