லங்கா IOC டீசல் விலைகள் உயர்வு

லங்கா IOC டீசல் விலைகள் உயர்வு

லங்கா ஐஓசி நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, டீசல் வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை விவரங்கள் பின்வருமாறு:

எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) டீசல் – ரூ. 551 இலிருந்து ரூ. 590 ஆக உயர்வு பெறுகிறது.

லங்கா சூப்பர் டீசல் (LSD) – ரூ. 575 இலிருந்து ரூ. 600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) – ரூ. 588 இலிருந்து ரூ. 620 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த விலை திருத்தம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )