பல பகுதிகளுக்கு 12 மணி நேர நீர்வெட்டு

பல பகுதிகளுக்கு 12 மணி நேர நீர்வெட்டு

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக லபுகம மற்றும் கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், சில பகுதிகளில் இரு கட்டங்களாக தலா 12 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (08) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கலகெதர, இரிதாபொல, பின்னவல, வேவல்பனாவ, பிடும்பே, மீப்பே, மாவத்தகம, பாதுக்க, உடுமுல்ல, அருக்வத்த, வேரகல, போப்பே, மலகல, கஹவல, மில்லவ, கொட்டியங்கொட, போரகெதர, அங்கம்பிட்டிய, அங்கம்மன, மீரியகல்ல மற்றும் யடவத்துர உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, நேற்று (07) இரவு 8.00 மணி முதல் இன்று (08) காலை 8.00 மணி வரை பெலன்வத்த, சித்தமுல்ல, எருவ்வல, நிவன்திடிய, போகுந்தர வீதி, ரத்மல்தெனிய, மஹரகம – பிலியந்தலை வீதி, மொரகட்டிய வீதி, ஹிரிபிட்டிய, கொரகபிட்டிய வீதி, நியாந்தகல வீதி, தொலேகடே சந்தி, குடாமாதுவ மற்றும் புபுது மாவத்தை 255 பேருந்து வீதியின் வயல் பகுதி வரை நீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீர்வள சேமிப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )