
கொழும்பு டி லா சால் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வு
கொழும்பு, டி லா சால் கல்லூரியில் (De La Salle College) தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் அருட்திரு சகோ. ஜோசப் ஜெயகாந்தன் தலைமையில் குறித்த நிகழ்வு கல்லூரியின் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ கலந்துகொண்டார்.
மேலும், வடகொழும்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. தினுகா டி சில்வா மற்றும் வட கொழும்பு (Colombo North) வலய ஆங்கில மொழி பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி எஸ். பி.எஸ் . ஸ்ரீ ரஞ்சனி,வட கொழும்பில் விஞ்ஞானப் பாட ஆசிரியர் ஆலோசகர் திரு சுசில் பிரேமஜெயந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்





CATEGORIES Sri Lanka

