
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) பிற்பகல் வேளையில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது பலத்த மின்னல் தாக்கங்களுடன் தற்காலிகமாகக் கடும் காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெளியிடப்பட்ட இந்த ‘அம்பர்’ எச்சரிக்கை இன்று இரவு 11:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

