யாழ் மாவட்ட செயலகத்தில் ‘ஆரோக்கிய உணவகம்’ திறப்பு

யாழ் மாவட்ட செயலகத்தில் ‘ஆரோக்கிய உணவகம்’ திறப்பு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புனரமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் அமைக்கப்பட்ட ‘ஆரோக்கிய உணவகம்’ இன்று (09) வைபவமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), இலங்கை வங்கி பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட பல பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக பணியாளர்கள் மற்றும் ஆரோக்கிய உணவக ஊழியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் சத்தான உணவுகளை வழங்கும் நோக்கில் இவ்வுணவகம் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )