பயகலா தொடருந்து கடவையில் சிற்றூந்து–தொடருந்து மோதி விபத்து ; மூவர் காயம்

பயகலா தொடருந்து கடவையில் சிற்றூந்து–தொடருந்து மோதி விபத்து ; மூவர் காயம்

பயகலா பகுதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் சிற்றூந்து ஒன்று தொடருந்துடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தினால் கடலோர தொடருந்து பாதையிலான சேவைகள் தற்போது தாமதமடைந்துள்ளன.

பயணிகள் அவதானத்துடன் பயணம் செய்யுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )