பரஸ்பர வரி 15% ஆக உயர்வு ; டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பரஸ்பர வரி 15% ஆக உயர்வு ; டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்திருந்தார்.

அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டிய அவர், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இந்த வரி விதிப்பை அமல்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதி தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதாகக் கூறி அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவர் விதித்த வரிகளை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்கு பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சமூக வலைதளமான Truth Social வழியாக வெளியிட்ட அறிவிப்பில், அந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதிய 15 சதவீத வரி விதிப்பு பிப்ரவரி 24ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )