சாரதிகள் அலட்சியமாக வாகனம் செலுத்தினால் வீடியோக்களை                         070-4755600 என்ற பொலிஸ் WhatsAppற்கு அனுப்புங்கள்

சாரதிகள் அலட்சியமாக வாகனம் செலுத்தினால் வீடியோக்களை 070-4755600 என்ற பொலிஸ் WhatsAppற்கு அனுப்புங்கள்

அலட்சியமான மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் செலுத்தும் சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை பொலிஸாருக்கு முறையிடுவதற்காக புதிய ‘WhatsApp’ இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையின்படி, பொதுமக்கள் 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக அத்தகைய வீடியோக்களை அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இலக்கமானது போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும்.

இந்தச் சேவை 24 மணிநேரமும் செயல்படும்.

வீடியோ காட்சிகளை அனுப்பும்போது, அந்தச் சம்பவம் நடைபெற்ற திகதி, இடம் மற்றும் உரிய பொலிஸ் பிரிவு ஆகிய விபரங்களை தெளிவாகக் குறிப்பிடுமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையானது பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்டறியவும் எடுக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய முயற்சியாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )