
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஹோர்மோஸ் ஜலசந்தி வேறுவழியில் மீண்டும் திறக்கப்படும் – டிரம்ப்
பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் .ஈரானின் ஒத்துழைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தி மிக விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் தெரிவித்தார்.
ஒருவேளை பேச்சுவார்த்தை பலன் தராவிட்டால், எங்களால் வேறு வழியில் இதனை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் இன்று அமெரிக்க மற்றும் ஈரானியத் தூதுக்குழுவினருக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறும் நிலையில், டிரம்பின் இவ்வாறு கூறியுள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கும் போது .
”ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
அவர்களின் கடற்படை, விமானப்படை மற்றும் தலைவர்கள் அனைவரும் அகற்றப்பட்டுவிட்டார்கள் .அமெரிக்க போர்க்கப்பல்கள் ‘சிறந்த வெடிமருந்துகளுடன்’ தயார் நிலையில் இருகின்றன .
ஈரான் ஒத்துழைத்தாலும் ஒத்துழைக்காவிட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தி விரைவில் திறக்கப்படும் . அமெரிக்கா இந்த ஜலசந்தியைப் பயன்படுத்துவதில்லை என்றாலும், மற்ற நாடுகள் இதைப் பயன்படுத்துவதால், வணிகத்திற்காக இது திறக்கப்படும் .
ஈரானுடன் ஒரு நல்ல ஒப்பந்தம் அமைவதற்கான முதன்மை நிபந்தனை அணு ஆயுதங்கள் இல்லாத நிலை.
இதுவே அந்த ஒப்பந்தத்தின் 99% முக்கியத்துவம் வாய்ந்தது .”
என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
இன்று பாகிஸ்தானின் மத்தியஸ்தம் வகிக்க ஜே.டி (JD), ஸ்டீவ் (Steve) மற்றும் ஜாரெட் (Jared) ஆகியோர் அடங்கிய குழுவினர் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

