
இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது
இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் (Lanka Coal Company) அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்துள்ளது.
2009ஆம் ஆண்டு முதல் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலாளரினால் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முறைப்பாட்டிற்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட விசேட விசாரணைகளின் ஒரு கட்டமாகவே இந்த அலுவலகம் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

