
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சை ஏப்ரல் 21 முதல்
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு (National Colleges of Education) ஆசிரிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள், 2026 ஏப்ரல் 21 முதல் 2026 மே 08 வரை அந்தந்த கல்லூரிகளில் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நேர்முகப்பரீட்சைக்குத் தெரிவாகியுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

