
லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 10 நாட்கள் போர்நிறுத்தம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2:30இலிருந்து ஆரம்பம்
லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 10 நாட்களுக்கு போர்நிறுத்தத்தை மேற்கொள்ள உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களின் தகவல்படி, இந்த போர்நிறுத்தம் EST நேரப்படி (Eastern Standard Time)ஏப்ரல் 16 மாலை 5:00 மணிக்கும் .
BST நேரப்படி (British Summer Time) ஏப்ரல் 16 ஆம் திகதி இரவு 22:00மணிக்கும் இலங்கை நேரப்படி ஏப்ரல் 17 அதிகாலை 2:30 அளவிலும் ஆரம்பமாகியது .
இந்தத் தீர்மானத்தின் ஊடாக பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை தற்காலிகமாகத் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இரு தரப்பினரும் தாக்குதல்களைத் தவிர்ப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன.

